அண்ணாமலை

ஒரிஜினல் கதை தான் உங்களுக்கு தெரியுமே. குடிசை ரஜினியும் பங்களா சரத்பாபுவும் சின்ன வயசுலேந்து நண்பர்கள். ராதாரவி ரஜினியோட இடத்தை ஏமாத்தி வாங்கி அங்க ஹோட்டல் கட்டிடறார். இருந்த வீட்டை இடிச்சிட்டதால ரஜினி கோவப்பட்டு, சரத்பாபு கூட்டத்தையும் ஏழையாக்கி நடுத்தெருவுல நிக்க வெக்கறேன்னு சபதம் போட்டு ஜெயிச்சும் காட்டறாரு. கடைசில சரத்பாபுவை மன்னிச்சு அவரோட பங்களாவை திருப்பி குடுத்துடறாரு.

குடிசைல இருந்தாலும் ரஜினி நிம்மதியா இருப்பாரு. அப்ப சரத்பாபுவும் சந்தோஷமா தான் இருப்பாரு. ரஜினி சவால் விட்ட பிறகு, காட்டுத்தனமா வேலை செய்வாரு.. பால் பண்ணை வெச்சு.. பயங்கரமா பிசினஸை டெவலப் பண்ணி, கன்னாபின்னான்னு பிஸியாயிடுவாரு. அதுவும் ஒரே பாட்டுல.கதை சூப்பர் கதை தான். படமும் சூப்பர் ஹிட்டு தான். இருந்தாலும்....
காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்ட குஷ்புவோட பேசக்கூட நேரம் இருக்காது. ஜனகராஜ் கூட அரட்டையடிக்க டைம் இருக்காது... ஆசையா வெச்சிருந்த சைக்கிளை ஓட்ட முடியாது.. அம்மா மனோரமாகிட்ட கலகலப்பா இருக்க முடியாது.. பிஸி.. பிஸி.. பிஸி..  அவரோட நோக்கம் எல்லாம் சவால்ல ஜெயிக்கணுங்கறது தான்.. அவரு வாழ்க்கைல கிட்டத்தட்ட 20 வருஷம் இதுலயே போயிடும்.. அப்பவும் சரத்பாபு தன் ஹோட்டல் பிஸினஸை பாத்துகிட்டு , வசதியா தான் இருப்பாரு.
ரஜினி அவ்ளோ கஷ்டப்பட்டு, சரத்பாபுவோட பதவி, பங்களா எல்லாத்தையும் பறிச்சிடுவாரு. உடனே சரத்பாபு மனசு திருந்திடுவாரு. ரஜினி ஹீரோவாச்சே.. திருந்தின நண்பனுக்கு சொத்தை திருப்பி குடுத்துடுவாரு..!
என் டவுட்டு என்னான்னா... ரஜினி பெரிசா நினைக்கற தன் நிம்மதி, சந்தோஷம் எல்லாத்தையும் தொலைச்சிடறாரு. சரத்பாபுவை பொறுத்தவரை ஒரே ஒரு நாள் தான் கஷ்டம். பங்களாவும் கைக்கு வந்துடுது, ரஜினியும் சம்மந்தி ஆயிடறாரு.
இதுல யாரு புத்திசாலி ? ரஜினியா இல்லை சரத்பாபுவா?
குடும்பம், சந்தோஷம், நிம்மதி எல்லாத்தையும் இழந்து 20 வருஷ வாழ்க்கைய போக்கடிச்சு ரஜினி சவால்ல ஜெயிச்சதா காட்டினதுக்கு பதிலா, ரஜினி வழக்கம் போல சந்தோஷமா, நிம்மதியா நண்பர்கள் / குடும்பத்து ஆளுங்களோட உதவியோட, சேர்ந்துகிட்டு அதே மாதிரி போராடி பணமும் பதவியும் ஜெயிச்சு, சரத்பாபு / ராதாரவியை தோற்கடிக்கற மாதிரி காட்டியிருந்தா இன்னும் பெட்டரா இருந்திருக்கும்.. ரஜினி கேரக்டர் மேல இன்ன்ன்ன்னும் மரியாதை கூடியிருக்கும் அப்டீன்னு நான் நினைக்கறேன்.
நீங்க கேட்டதால தான் இந்த 'கதைய மாத்தி'னேன். மத்தபடி ஒரிஜினல் 'அண்ணாமலை'  என்னோட ஆல் டைம் ஃபேவரைட்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...